தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால், பள்ளிகள் திறக்கப்படாமல், 'ஆன்லைன்' வழி வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டன.புதிய கல்வி ஆண்டில், ஏழு மாதங்கள் வரை பள்ளிகள் செயல்படாததால், பள்ளிகள் திறக்கப்பட்டதும், வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகளை நடத்த, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பல மாதங்களாக ஓய்வு எடுத்து விட்டு, திடீரென ஆறு நாட்களும் வேலை செய்வதில், ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், சனிக்கிழமை மட்டும் விடுப்பு அளிக்கும்படி கோரி வந்தனர்.வரும் வாரங்களில் சனி, ஞாயிற்று கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதால், இந்த பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, சனிக்கிழமை விடுமுறை வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். விரைவில் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு வரலாம் என, கூறப்படுகிறது.

0 Comments