பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.


 


பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


அதில் கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்றும் அறிகுறி உள்ள ஆசிரியர்களை தனிமைப்படுத்த வேண்டியது கட்டாயம் என்றும்,முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


வகுப்பறைகள், மாணவர்கள் கூடும் இடங்களில் தினசரி கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments