SBI Bank - How to Update Mobile Number via Online


IMG_ORG_1579482424010

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தங்கள் வாடிக்கையாளர்கள் மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்டவைகளை எளிதாக ஆன்லைனிலேயே அப்டேட் செய்யும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், வங்கிக்கணக்கு உடன் மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்டவைகளை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக்கிளைகளை அணுகி வருகிறார்கள்.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தங்கள் வாடிக்கையாளர்கள் எளிதில் ஆன்லைனிலேயே மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்டவைகளை அப்டேட் செய்ய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

IMG_ORG_1579482486691

பணப்பரிவத்தனைகளை மேற்கொள்ள ஒன்டைம் பாஸ்வேர்டு எனப்படும் எஸ்எம்எஸ் மொபைல்போன் வழியாக பெறப்படுகிறது. எனவே, வங்கிக்கணக்கு உடன் மொபைல் எண், இமெயில் ஐடி இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனிலேயே எளிதாக மொபைல் எண் அப்டேட் செய்யலாம் இதோ வழிமுறை

இதோ வழிமுறை
 
IMG_ORG_1579482525745

SBI online banking : மொபைல் எண் அப்டேட் செய்யலாம் இதோ வழிமுறை

  • எஸ்பிஐ இன்டர்நெட் பேங்கிங் இணையதளத்தில் லாகின் செய்யவும்
  • அதில் My Accounts & Profile பிரிவிற்கு செல்லவும் பின் புரோபைல் தேர்வு செய்யவும்
  • அதில் Personal Details/Mobile தெரிவு செய்யவும்
  • குயிக் கான்டாக்ட் பிரிவில் எடிட் ஐகானை அழுத்தவும்
  • அதில் புதிய மொபைல் எண், இமெயில் ஐடியை பதிவு செய்யவும்
  • பழைய எண்ணிற்கு ஓடிபி வரும் அதை இங்கே பதிவு செய்து சப்மிட் அழுத்தவும்
எஸ்பிஐ மொபைல் ஆப்பில் அப்டேட் செய்யும் முறை
  • எஸ்பிஐ மொபைல் ஆப்பில் லாகின் செய்யவும் 
  • மெனு பாரில் மை புரோபைல்,  அதில் எடிட் ஐகானை தெரிவு செய்யவும் 
  • புதிய மொபைல் எண், இமெயில் ஐடி பதிவு செய்யவும் 
  • பழைய மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் அதை பதிவு செய்து சப்மிட் அழுத்தவும்
வங்கிக்கிளைகளில் அப்டேட் செய்யும் முறை

அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கிளைகளில் மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்டவைகளை தகுந்த அடையாள ஆவணங்களுடன் கொண்டு சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments