கால்நடை மருத்துவ படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு


கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். 

அப்பட்டியலில் கன்னியாகுமரி மாணவி முதலிடம் பிடித்தார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் சென்னை நாமக்கல் திருநெல்வேலி ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு; நான்கு ஆண்டு உணவு பால்வளம் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் உள்ளன.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் போக 306 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன.


பி.டெக். தொழில்நுட்ப படிப்புகளில் 100 இடங்களில் உணவு தொழில்நுட்ப இடங்களில் ஆறு இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு போக 94 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன.

‌ மாணவர் சேர்க்கை ‌


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்த படிப்புகளுக்கு 2020 ~~ 21ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.


 அதாவது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 12 ஆயிரத்து 477; பி.டெக். படிப்புகளுக்கு 2940 மாணவர்களும் விண்ணப்பித்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 246 விண்ணப்பங்களும் பி.டெக். படிப்புகளுக்கு 2518 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன


.தரவரிசை வெளியீடு


இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.


இதில் கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணுமாயா நாயர் முதலிடம் பிடித்தார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சுந்தர் இரண்டாமிடமும் கோவை மாவட்டத்தை சேர்ந்த கோகிலா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.


பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி சிவகனி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரிதி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர்


.தற்போது எம்.பி.பி.எஸ். ~ பி.டி.எஸ். படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இதன் முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்ததும் கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments