விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் : 1. பகுதிநேர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமூக அறிவியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார் . பகுதி நேர முதுகலை ஆசிரியர்கள் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு இயற்பியல் / வேதியியல் / உயிரியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார்கள் . 2. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் இணையதளம் மூலம் வகுப்புகளைக் கையாளவும் , தேர்வுகளை நடத்தவும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் . 3. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 40 நிமிட கால அளவுள்ள 30 பாடவேளைகள் வழங்கப்படும் . 4. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மதிப்பீட்டுப் பணிகள் உள்ளடக்கிய கல்வித்துறை தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்ய ஈடுபடுத்தப்படுவார்கள் . இதற்காக பாடவேளைக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை தவிர்த்து மேல் ஊதியம் ஏதும் வழங்கப்படாது . 5. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு ரூ . 26,250 / - மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும் . 6. பகுதி நேர ஆசிரியர்கள் இதர சலுகைகளான விடுமுறை , மருத்துவ வசதி , பயண அனுமதிகள் மற்றும் கூடுதல் படிகள் முதலியவற்றிற்கு உரிமை கோர முடியாது . 7. பகுதிநேர ஆசிரியர்கள் இரயில்வே ஆசிரியர்களாக கருதப்படமாட்டார்கள் . அவர்கள் நிரந்தர முறையில் நியமிக்கப்பட உரிமையோ அல்லது கோரிக்கை விடுக்கவோ முடியாது . இதற்கான உறுதிமொழி வின்னப்பத்தாரரால் ஏற்கப்பட வேண்டும் . 8. பகுதி நேர ஆசிரியர்களுக்கான இதர நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நியமனத்தின் போது அறிவிக்கப்படும் . 9. பகுதி நேர ஆசிரியர்கள் 07 ( ஏழு ) பணி நாட்களுக்கு குறையாமலும் 200 ( இருநூறு ) பணி நாட்களுக்கு மிகாமலும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் . இந்நடைமுறை , எந்நேரத்திலும் , எக்காரணம் கருதியும் , எந்தவொரு அறிவிப்பும் இன்றி விலக்கி கொள்ளப்படலாம் .
0 Comments