மருத்துவ படிப்புக்கான கட்டண விவரம் வெளியீடு.


எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்பில் சேரும்போது, கல்லுாரியின் ஆண்டு கட்டணத்தை பார்த்து தேர்ந்தெடுக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. கட்டண விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
gallerye_235531998_2646296

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு முன், தனியார் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை பார்த்து, கல்லுாரியை தேர்ந்தெடுக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.இதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 13 ஆயிரத்து, 610 ரூபாய்; பி.டி.எஸ்., படிப்புக்கு, 11 ஆயிரத்து, 610 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் பல் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ்., இடங்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 6 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 9 லட்சம் ரூபாய் கட்டணம்.ஆனால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களுக்கு, கல்லுாரியின் உட்கட்டமைப்பு வசதிக்கேற்ப, கட்டணம் மாறுபடுகிறது.


Post a Comment

0 Comments