அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் உயர ஆசிரியர்களின் பொதுத் தேர்வு தொடர்பான சில ஆலோசனைகள்


கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு தொடர்பான சில கோரிக்கைகள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பு தாமதமாவதால், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், இந்த கல்வியாண்டு நடைபெற உள்ள 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் உள்ள பயிற்சி வினாக்களிலிருந்து மட்டும், கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

இதற்கேற்ப வினாத்தாள் வடிவமைப்பு முறையும், மாதிரி வினாத்தாள்கள் தொகுப்பும் விரைவாக வெளியிட வேண்டும்.

கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில், CBSE பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், வினாக்கள் எளிமையாக கேட்கப் பட்டதால், தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட, CBSE பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றதால், தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு, தரமான பொறியியல் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு குறைந்துள்ளதாக கூறப் படுகிறது.

2020-21 ஆம் கல்வியாண்டில் தமிழக பாடத்திட்டத்தில் பயின்று தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில், தமிழக பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 90% பொறியியல் படிப்பு இடங்களும், பிற பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இதே போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியது போல், தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 90 % சதவீத உள் ஒதுக்கீடும், பிற பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடும் வழங்க வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் தான், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இல்லையேல், புற்றீசல் போல பெருகும் CBSE பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்கள் சேரக் கூடும். இதனால் பெற்றோர்களுக்கு கட்டணத் தொகை செலவும் அதிகரிக்கும்.

(மெட்ரிக் பள்ளிகளில் +1 மாணவர்களுக்கான கட்டணம் சுமார் ரூ 1 இலட்சம். NEET கட்டணம் தனி.

ஆனால் CBSE பள்ளிகளில் +1 மாணவர்களுக்கான கட்டணம் சுமார் 2 இலட்சம், NEET கட்டணம் தனி.)

மேற்கண்ட ஆலோசனைகளை தமிழக அரசு நடைமுறை படுத்தினால், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மிகுந்த பயனை அடைவார்கள்.

இல்லையேல் CBSE பாடத்திட்டத்தில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் கணிசமாக அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசு பரிசீலனை செய்யுமா?

தகவல்: லாரன்ஸ், திருச்சி

Post a Comment

0 Comments