தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறுவோர் தொடர்ந்துஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழை ஆண்டுதோறும் சமர்ப்பிக்கவேண்டும்.
தற்போது கொரோனா தொற்று பரவல் இருப்பதால் அலுவலகம் வராமல் டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ் அனுப்ப வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 135 மண்டல அலுவலகங்கள்; 117 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கிகள் அல்லது அருகில் உள்ள தபால் நிலையங்களில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
மேலும் பொதுச்சேவை மையங்கள் மற்றும் 'உமாங்க்' செயலி வாயிலாகவும் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். இதுதவிர தபால்காரர் வாயிலாக வீட்டில் இருந்தவாறே சமர்ப்பிக்கும் புதிய திட்டமும் துவங்கப்பட்டுள்ளது.
0 Comments