மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.


 


தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 


வழக்கின் பின்னணி 


நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் தமிழக அரசின் அரசாணை மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையின் போது, சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கு 1999ம் ஆண்டே தமிழகத்தில் இந்த இடஒதுக்கீடு என்பது அறிமுகப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது என்றும், அதனால் அதனை நடைமுறைப்படுத்த தடையில்லை என ரிட் மனுதாரர்ஜள் தப்பிலும், அதேப்போன்று தமிழக அரசு தரப்பில், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புக்கு வழங்கப்படும் 50சதவீத உள் இடஒதுக்கீடு என்பது தமிழகத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் புதியதாக எந்த நடைமுறையும் கிடையாது. 


இது அரசின் கொள்கை சாந்த ஒன்றாகும். அதனால் அரசாணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அதனால் இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 


உச்சநீதிமன்றம் தீர்ப்பு 


இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு மேற்கண்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு கிடையாது,எனத் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments