அரசு நீட் இலவச பயிற்சி மையத்தில் 14 ஆயிரம் பேர் சேர்ந்தனர்: அதிகாரிகள் தகவல்.


1605000715889
தமிழகத்தில் 2018ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2018-2019ம் ஆண்டில் நடந்த நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க வசதியாக ₹400 கோடி செலவில் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவசமாக நீட் தேர்வு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவச நீட் தேர்வுப் பயிற்சியை நடத்தி வருகிறது.

இதில் பயிற்சி பெற்று கடந்த ஆண்டு சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவியர் நீட் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 1165 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது நடக்க உள்ள மருத்துவ கவுன்சலிங்கில் அவர்களும் பங்கேற்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த நீட் தேர்வில் பங்கேற்க வசதியாக தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும், கடந்த மாதம் நடத்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் தனியார் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கவும் சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது மாணவர்கள் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு பெற உள்ளனர். இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் நீட் இலவச பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 14 ஆயிரம் மாணவ மாணவியர் சேர்ந்துள்ளனர். இவர்–்களுக்கு தனியார் கல்லூரிகளில் உணவு இருப்பிட வசதியுடன் பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments