JEE தேர்வில் திருப்பூரைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்று, அசத்தியுள்ளார்.என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த சவுந்தர்யா என்ற மாணவி, 1ம் தேதி நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில், 77.9 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.திருப்பூர் மாவட்ட அளவில், அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்ற பெருமையை பெற்று உள்ள சவுந்தர்யா கூறியதாவது:மனப்பாடம் செய்யாமல், கருத்தை உள்வாங்கி படிப்பேன்.
ஜே.இ.இ., தேர்வுக்கென தனியாக பயிற்சி மையத்தில் சேரவில்லை. வகுப்பறையில் படிப்பதோடு சரி; அந்தளவு, ஆசிரியர்களின் கற்பித்தல் இருந்தது.பிளஸ் 2வில், 427 மதிப்பெண் பெற்றேன். ஐ.ஐ.டி., யில் நுழைந்து மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.இவ்வாறு, அவர் கூறினார்.இவரது தந்தை வெள்ளிங்கிரி, கார்பென்டர். அம்மா சரஸ்வதி, இல்லத்தரசி.
0 Comments