Govt Law College சட்டப் படிப்பு இன்று விண்ணப்பம் வினியோகம்



images%2528205%2529

மூன்று ஆண்டுகளுக்கான, எல்.எல்.பி., சட்டப்படிப்புக்கு இன்று முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளர், ரஞ்சித் உம்மன் ஆப்ரஹாம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:அம்பேத்கர் சட்ட பல்கலையில் உள்ள, சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலையின் இணைப்பில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., மற்றும் இரண்டாண்டு, எல்.எல்.எம்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.எல்.எல்.பி.,க்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; அக்., 28க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

எல்.எல்.எம்., சட்ட மேற்படிப்புக்கு, வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நவம்பர், 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.எல்.எல்.பி.,யில் சேர, ஏதாவது ஒரு பாடப்பிரிவில், இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்பில், சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், குறைந்தபட்சம், 55 சதவீதம்; மற்றவர்கள், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இணைப்பு கல்லுாரிகளில் படிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தபட்சம், 40 சதவீதமும், மற்றவர்கள், 45 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.சட்ட பல்கலையின், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் நேரடியாகவும் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments