தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் புதிய பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் முழுமையாக பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 15.3 லட்சம் மாணர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
பள்ளிகளில் காலியாக உள்ள டெக்னிக்கல் பிரிவிற்கு விரைவில் பணியிடம் நிரப்பப்படும்.மேலும், 15 இடங்களில் துவக்கப் பள்ளிகளும் 10 இடங்களில் உயர்நிலை பள்ளிகளும் துவங்கப்படும்'' என்று தெரிவித்தார்.
0 Comments