அரசின் ஒப்புதலுக்கு முன்னரே, பள்ளியை திறக்கும் தேதியை முடிவு செய்த தனியார் பள்ளிகள் ..!


நான்காம் கட்ட அன்லாக் தொடங்கியுள்ள நிலையில், சில மாநிலங்கள்,கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியது. எனினும், இந்த மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில், பெற்றோர்கள் அனுமதியுடன் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது தொடர்பான அட்டவணை குறித்து பள்ளிகள் தகவல் அனுப்பி வருவதாக, பெற்றோர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். செப்டம்பர் 21 அல்லது 23 ஆம் தேதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று நகரம் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் உள்ள சில சுயநிதி கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள், ஏற்கனவே அறிவித்துள்ளன.

இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்து கல்வி துறை, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த உத்தரவ்ய் அல்லது அறிவுறுத்தலை வெளியிடவில்லை என்று கூறியது.

கொரோனா தொற்றுநோயால் பாடங்களை எடுத்து முடிப்பதி உள்ள பிரச்சனைகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் கல்வித் துறி தெரிவித்துள்ளது.

பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பாக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் முன், எந்த கல்வி நிறுவனமும் தன்னிச்சையாக எதுவும் முடிவெடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், முழுமையான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் இருந்து, ஏராளமான மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அல்லது குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இடம்பெயர்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..!!!

ஆரம்ப பள்ளிகளை பொறுத்தவரை பள்ளிகள் மீண்டும் திறக்கும் போது கட்டணம் கட்டலாம் என பல பெற்றோர்கள் காத்திருக்கின்றனர் என்றும், இந்த நிலைமை பள்ளிகளுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

பல சிறிய பள்ளிகளை பொறுத்தவரை, வாடகை மற்றும் மின்சார கட்டணங்களை கூட செலுத்த முடியாத நிலை உள்ளது என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

மேலும் 25% க்கும் மேற்றுபட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

சிறிய பள்ளிகளை பொறுத்தவரை கட்டணம் மட்டுமே அவர்களுக்கு நிதி ஆதாரமாக இருப்பதால், பல பள்ளிகள் மூடப்படும் விளிம்பில் உள்ளன. மார்ச் 17 முதல் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளிகளுக்கான அங்கீகார சான்றிதழ்களை புதுப்பிக்க இயலாததால், அதன் காரணமாகவும் சிறிய தனியார் பள்ளிகள் பிரச்சனையில் சிக்கியுள்ளன.

90 சதவீதத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் மே 31 அன்று காலாவதியான நிலையில் அவர்களால் இன்னும் சான்றிதழ்களை புதுப்பிக்க முடியவில்லை என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது

Post a Comment

0 Comments