மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான மிஷன் கர்மயோகி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


1599065421921
மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான மிஷன் கர்மயோகிக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. அரசு ஊழியர்கள் சர்வதேச சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ளும் அதேவேளையில், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பின்வரும் நிறுவன கட்டமைப்பின் கீழ் அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்ட செயல்படும்: பிரதமரின் பொது மனிதவள மேம்பாட்டுக் குழு, திறன் வளர்த்தல் ஆணையம், டிஜிட்டல் சொத்துகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கான தொழில்நுட்ப தளத்தை நிர்வகிக்க சிறப்பு நோக்கு அமைப்பு, அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு.எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் இந்தியாவின் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாக, ஆக்கப்பூர்வமானவர்களாக, கற்பனைத்திறன் மிக்கவர்களாக, புதுமைகளை படைப்பவர்களாக, செயல்திறன் மிக்கவர்களாக, நிபுணத்துவம் பெற்றவர்களாக, முற்போக்கானவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக, வெளிப்படைத்தன்மை மிக்கவர்களாக, தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாக தயார்படுத்துவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும்.

அரசு ஊழியர் திறன் வளர்த்தல் திட்டங்களுக்கு பிரதமர் தலைமையிலான பொது மனிதவள மேம்பாட்டுக் குழு ஒப்புதலளித்து கண்காணிக்கும். மிஷன் கர்மயோகி தனிநபர் (அரசு ஊழியர்கள்) மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். பிரிவு அதிகாரிகள் முதல் செயலாளர்கள் வரை அனைவரும் இந்த திட்டத்திற்குள் அடங்குவர். இதன் மூலம் அதிகாரி தனக்கு ஆர்வமுள்ள துறையைத் தேர்வுசெய்ய முடியும். மேலும் அதிகாரிகள் தங்கள் வேலைகளை திறம்படச் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

Post a Comment

0 Comments