அரசுப் பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்கள் சேர்த்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை புதிதாக 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இந்த ஆண்டு 238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர்.
வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கிறேன்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
0 Comments