₹25,000/ கோடி - ஆண்டுக்கு டியூஷன் ஃபீஸ் - ஆய்வில் தகவல்.


இந்தியாவில் தங்கள் பிள்ளைகளின் டியூஷனுக்காக வருடத்திற்கு பெற்றோர் ரூ 25,000 கோடி ரூபாய் செலவிடுவதாக தேசிய புள்ளியல் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.
2017-18 கல்வியாண்டில் பள்ளிக்கல்வி குறித்து தேசிய புள்ளியல் அலுவலகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் தங்கள் பிள்ளைகளின் டியூசன் வகுப்புகளுக்கு மட்டும் பெற்றோர் வருடத்திற்கு ரூ 25,000 கோடி வரை செலவு செய்வதாக தெரிய வந்துள்ளது.
இதில் நுழைவு தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு செலவிடப்படும் தொகை சேர்க்கவில்லை. பள்ளிக் கல்விககும் எழுத்தறிவுக்கும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடே ரூ 59 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பிள்ளைகளின் படிப்புச்செலவுக்காக ஒரு வருடத்திற்கு பெற்றோர் செலவு செய்யும் மொத்த தொகை 1.9 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் புத்தகங்களுக்காகவும். தனியார் டியூஷன்களுக்கு 13 சதவீதமும் செலவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Post a Comment

0 Comments