அதிரவைக்கும் பள்ளி கட்டணம் – அதிரடி உத்தரவு போட்ட நிர்வாகம் …!

கொரோனா பரவலால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாமர மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட மக்களிடம் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை செலுத்துங்கள் என்றோ,  பள்ளிக் கட்டணங்கள் செலுத்துங்கள் என்றோ யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றெல்லாம் அரசு உத்தரவு பிறப்பித்தது.  இது மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது
ஆனாலும் அரசின் உத்தரவை மீறி பல பள்ளிகளில் கட்டண வசூல் செய்யப்படுவதாக புகார் நீண்டுகொண்டே இருந்த நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் கட்டணத்தில்… 50 சதவீதத்தை வருகின்ற வியாழக்கிழமைகள் செலுத்த உத்தரவிட்டுள்ளது. ரூபாய் 55 ஆயிரம் – 70 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் உள்ள நீச்சல் குளத்திற்கு கட்டணம், நூலகக் கட்டணம் என பலவகைகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணங்களை குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு இப்படியான பள்ளிகள் மீது நடவடிவக்கை எடுக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா தாக்கம் சென்னையில் குறைந்து வரும் நிலையில் தற்போது கட்டண பிரச்சனை கடுமையாக எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments