மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

IMG_20200714_184508
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்ததால் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ரூ.5,000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொதுமுடக்க தளர்வுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார்கள்.

Post a Comment

0 Comments